கருட புராணம் என்பது பறவைகளின் அரசனான கருடனுக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்க்கும் பொருட்டு திருமால் எடுத்துரைக்கும் ஒரு அதி அற்புதமான புராணம் ஆகும். மனிதர்களாக பிறந்த அனைவரும் குறிப்பாக எதையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ளக்கூடிய உயிரினமாக இருப்பதாலும், பிறப்புகளில் உன்னதமான பிறப்பான மானுட பிறவியில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய புராணம் கருட புராணம் ஆகும்.
கருட புராணம் என்பது பூமியில் பிறந்து, ஆன்மாவுடன் உடலும் இணைந்து இருக்கும் பொழுது நாம் எவ்விதம் வாழ வேண்டும்? என்றும், அவ்விதமாக வாழும்போது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் உடலை இழந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய இன்ப, துன்பங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கை சாஸ்திரமாகும்.

கருட புராணத்தை படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவர் வாசிக்க இன்னொருவர் கேட்பதன் மூலமாகவோ இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். நாம் செய்யும் சிறு செயல்கள் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த புராணம் நமக்கு எடுத்துரைக்கும்.
நமது பெற்றோர்களுக்கு நாம் எவ்விதம் சில கடமைகளை செய்ய வேண்டும்? என்றும், அந்த கடமைகளை செய்ய தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றியும், நாம் முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கக்கூடிய புராணம் கருட புராணம் ஆகும்.
இந்த பூமியில் வாழும் வரை நம்மால் முடிந்த அளவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருட புராணத்தை பற்றி அறிந்து கொள்ள கருட புராணம் புத்தகம் வாங்கி படியுங்கள்.