யோக நெறிகளைக் கையாள்வது காட்டு யானையை வசப்படுத்துவதற்கு நிகரானது.
காட்டில் வைத்த தீயைக் காற்று வந்து உசுப்பியதுபோல பிராணாயாமம் எனும் யோகத் தீயானது குண்டலினியை எழுப்பி மரணமில்லா பெருவாழ்வு தருகிறது..
உடம்பினில் வரும் நோய்களை விலக்கி, கவலைகள் தரும் மனதைப் போக்கி, துன்பம் அணுவளவும் இல்லாமல் வாழ்வதற்கு யோக மார்க்கத்தின் தொன்மையையும் சிறப்பினையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
சித்தர் கண்ட சிரஞ்சீவி ரகசியம் ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் புத்தகத்தின் முக்கிய தலைப்புகள் :.
ஸ்ரீபதஞ்சலி முனிவரும் சீடர்களும்.
ஸ்ரீபதஞ்சலி முனிவர் வாழ்வும் வாக்கும்.
பிரபஞ்சப் பொருளுரைக்கும் ஸ்ரீபதஞ்சலி யோக சூத்திர விளக்கம்.
உடலுக்கும் உயிருக்குமான பந்தம்.
சித்தர்களின் யோக நெறி.
குண்டலினியும் சித்தர்களும்.
வாசியோகம் எனும் மெய்ஞானம்.
அட்டமா சித்திகள் தரும் அற்புத யோகம்.
சித்தர் எனும் காட்டுத்தீ.
சமாதியும் முக்தியும்.
யோக முத்திரைகளும் சாகா நிலையும்.
யோக விழிப்பும் ஞானக்கண் திறப்பும் உட்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் சித்தர் கண்ட சிரஞ்சீவி ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.