இறுதி மூச்சுவரைக்கும் விவசாயத்துக்காக ஒருவர் வாழ்வை முழுவதுமாக அர்ப்பணிக்க முடியும் என நிரூபித்தவர், நம்மாழ்வார்.
நம்மாழ்வாருக்கென ஒரு தனித்தன்மை இருந்தது. கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் சொல்லிக் கொடுத்தார். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியது. இன்று பாரம்பரிய ரகங்கள், தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதற்குப் பின்னால் நம்மாழ்வாரின் நெடுங்கால பயணம் இருக்கிறது.
டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே! என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.
நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.
நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.
பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
நம்மாழ்வார் பற்றிய தகவல்களை விவசாயம் செய்பவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லாமல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
நம்மாழ்வார் பற்றிய தகவல்களும், அவரின் இயற்கை விவசாயம் சார்ந்த கருத்துக்களும் தொகுத்து புத்தக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சுடரொளி நம்மாழ்வார் புத்தகத்தை வாங்கி படியுங்கள்!